|
தமிழிலக்கியங்களில்
ஆய்வும் தோய்வுமுள்ள ஆற்றலாளர்
அருமை நண்பர் வெற்றிவேலன் என்பதை
அவரின் படைப்புகள்
பறைசாற்றுகின்றன. மானுடம் மீதான
நேசமும், இந்த மண்ணின் மீதான
பாசமும் வெற்றிவேலின்
படைப்புகளுக்கான ஊற்றுக்கண்.
-
கவிபேரரசு வைரமுத்து
-------------------------------------------------------------
கவிஞர் வ.சு.
வெற்றிவேல் அவர்களின் பாடல்கள்
எல்லாவற்றிலும் எதுகையும் மோனையும்
எம்பிக்குதிக்கும் கடல்
அலைகளைப்போல துள்ளி
எழுந்துள்ளன.இந்த வகையில்
இணையில்லா எதுகைச் சிற்பியாக நம்மை
வியப்பில் ஆழ்த்துகிறார்.
-
உவமைக் கவிஞர் சுரதா - "நெஞ்சில்
பூத்த மலர்கள்" |